திருப்பூர்: திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

60பார்த்தது
திருப்பூர்: திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூகத்தில் விளிம்புநிலை யில் உள்ள திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபா லினர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்க வசதியாக, மற்ற நலத்திட்ட உதவிகள் வழங் கும் தொடர்பு துறைகளுடன் ஒருங்கிணைத்து வருகிற 24-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல் படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் நலவாரிய அடையாள அட்டை, ஆதார் கார்டு திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி