உடுமலை ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

4பார்த்தது
உடுமலை ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தில்லைநகர் ரத்தனலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரத்தின லிங்கேஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமாளுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, அரிசி உள்ளிட்ட பதினாறு வகை பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ரத்தின லிங்கேஸ்வரரும் நந்தியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி