திருப்பூர்: 2-வது நாளாக சிறப்பு குழு விசாரணை

60பார்த்தது
திருப்பூர்: 2-வது நாளாக சிறப்பு குழு விசாரணை
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் தலைமையில் 4 பேர் கொண்ட குழு, திருப்பூர் மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவச்சலம் ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்றுமுன்தினம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகத்தில் விசாரணையை தொடங்கினார்கள்.
நேற்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தகுதியான நபர்களுக்கு தான் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா? , ஏதேனும் முறைகேடுகள், விதிமீறல் கள் நடத்துள்ளதா? என குழுவினர் விசாரணை மேற்கொண் டனர். திருப்பூர் மாவட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஸ்கூட்டர்களை பெற்ற பயனாளிகள் பட்டியலை சிறப்புக்குழு வினர் ஆய்வு செய்தனர். மேலும் விசாரணைக்காக மாற்றுத் திறனாளிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அறிக் கையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந் தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி