பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பாரவுனி-எர்ணாகுளம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண். 05263) வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் இரவு 8.30 மணிக்கு பாரவுனியில் இருந்து புறப்பட்டு, வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் காலை 6 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு 13 மற்றும் 14-ந்தேதிகளில் இரவு 10.15 மணிக்கு வந்து 10.17 மணிக்கு புறப்படும் என திருப்பூர் ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.