திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்

1பார்த்தது
திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்
தமிழ் புத்தாண்டு மற்றும் விசு பண்டிகையை முன்னிட்டு, மங்களூரு மற்றும் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும். மங்களூருவிலிருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நாளை மதியம் சென்னை எழும்பூரை அடையும். அதேபோல், சென்னையிலிருந்து நாளை மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை மங்களூருவை சென்றடையும்.