திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று புதிய அடையாள அட்டை பெறுதல், பழைய அட்டைகளை புதுப்பித்தல், பஸ் பாஸ் கோரி விண்ணப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். அரசு மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, ஊனத்தின் தன்மை குறித்த சான்றிதழ்களை வழங்கினர். பொது மருத்துவ ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன.