திருப்பூர்: விரட்டி விரட்டி சிறுவனை கடித்த தெருநாய்

1393பார்த்தது
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் பகுதியில் தெருவில் சென்ற சிறுவனை 2 தெருநாய்கள் துரத்தி கடித்தன. இதில் சிறுவன் கீழே விழுந்தான். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.