தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கட்டிடத் தொழிலாளியான தமிழரசன் (23) மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, 3 மாதங்களுக்கு முன்பு தர்மபுரிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் மாணவி கர்ப்பமானார். இது குறித்து பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி தமிழரசன் கைது செய்யப்பட்டார்.