திருப்பூர்: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தகவல்

82பார்த்தது
திருப்பூர்: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தகவல்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு, வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், ஆடை வடிவமைப்பு, நாகரிகம், விலங்கியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல், சர்வதேச வணிகவியல் என 14 துறைகள் செயல்பட்டு வருகின்றன. 

இளநிலைப்பட்டப்பிரிவுகளில் 17 பட்டவகுப்புகள் மற்றும் முதுநிலைப்பட்ட வகுப்புகளையும் சேர்த்து 3 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்வியாண்டில் (2025-26) தமிழக அரசால் 3 பாடப்பிரிவுகள் ஷிப்ட் 2-ல் புதிதாக தொடங்கப்படும் வணிகவியல் (பி.காம் 60), வணிகவியல் கணினி பயன்பாடு (பி.காம் சி.ஏ 60), சர்வதேச வணிகவியல் (பி.காம் ஐபி 50) பாடப்பிரிவுகளில் 170 இடங்களும், ஏற்கனவே முதல் ஷிப்ட்டில் உள்ள இளநிலை வேதியியல், இயற்பியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் 30 இடங்களும் சேர்ந்து மொத்தமாக 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் கடந்த 7-ந்தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வழிகாட்டுவதற்கு கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி