தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. 2021-2022 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும், கடந்த ஆண்டு இளநிலை முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்கவில்லை. எனவே, மேற்படிப்பு தொடரும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.