திருப்பூர் மத்திய பஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள ஜம் மனை பள்ளம் 1-வது வீதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தெற்கு போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்