ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 3 லட்சம் இழந்ததால் பனியன் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, டி.எஸ்.ஆர். லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவா வெங்கடாசலம் (வயது 47). பனியன் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சிவா வெங்கடாசலம் ஆன்லைன் மூலம் விளையாடும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். இதில் ரூ. 3 லட்சத்தை இழந்ததாக தெரிகிறது. தற்கொலை: கடன் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சிவா வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.