திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரித்ததில், கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி அரசு (19) என்பவர் சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.