எடப்பாடியாரின் கோரிக்கையால் வரி குறைப்பு
திருப்பூர் மாநகர அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். திருப்பூரைச் சார்ந்த வரி உயர்வு விவகாரத்தில் எடப்பாடியாரின் கோரிக்கையால் வரி குறைக்கப்பட்டதாகவும், திமுக கூட்டணி விரைவில் பிரியும் என்றும் அவர் கூறினார். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டன.
