போக்சோ சட்டத்தில் டெய்லர் கைது

78பார்த்தது
போக்சோ சட்டத்தில் டெய்லர் கைது
போக்சோ சட்டத்தில் டெய்லர் கைது



திருப்பூர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் கார்த் திகேயன் (வயது 25). தனியார் பனியன் நிறு வன டெய்லர். இவர் 15 வயது சிறுமியிடம் பழகி வந்தார். பின்னர் அந்த சிறுமியை திரு மணம் செய்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலகு பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, குழந்தை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கார்த்திகேயன் மீது வடக்கு மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி