திருப்பூர்: விபத்தில் வாலிபர் பலி

83பார்த்தது
திருப்பூர்: விபத்தில் வாலிபர் பலி
ஊத்துக்குளி அருகே பெரியவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (27) என்பவர் தனது சகோதரர் மோகனுடன் (24) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மோகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி