கார் திருடிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

4பார்த்தது
கார் திருடிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருப்பூரில், வாடகைக்கு ஓட்டிச் சென்ற காரை திருடிய சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அருள்மணிக்கு (29) 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா உத்தரவிட்டார். கடந்த 11-11-2017 அன்று காரை திருடிய அருள்மணி, கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துச் சென்றார். இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்மணியை கைது செய்து காரை மீட்டனர். இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி