திருப்பூரில் மோட்டார்சைக்கிள் திருடிய சதாம் உசேன் (33) என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் உத்தரவிட்டது. பிரகாஷ் என்பவரின் மோட்டார்சைக்கிளை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி திருடியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த சதாம் உசேன் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா இந்த தீர்ப்பை வழங்கினார்.