திருப்பூரில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. சதீஷ்குமார் என்பவரின் வீட்டில் கடந்த 19-5-2024 அன்று சட்டநாதன் என்பவர் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து 3 பவுன் வளையல், 8 சேலைகள், 1 கைக்கெடிகாரம் ஆகியவற்றை திருடினார். இது தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது.