திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பயங்கர தீ விபத்து

823பார்த்தது
திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பயங்கர தீ விபத்து
திருப்பூரில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பை தீப்பிடித்து எரிந்தது. திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் 2-வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை ஒட்டி குப்பை கொட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்ததில், குப்பையுடன் சருகுகளும் எரிந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இரவு நேர ரயில் போக்குவரத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி