திருப்பூரில் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வந்த தவெக நிர்வாகிகளை, முதலில் அரசியலுக்கு வாருங்கள், பிறகு ஆதரவு தாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பியதாக தகவல். தமிழ்நாடு முழுவதும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ. 19,500, சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் நிலையில் ரூ. 15,700 அடிப்படை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அரசு துறை காலி பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும் என்றும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.