திருப்பூர் மாநகரில் 15 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இருவரும் காதலித்து வந்த நிலையில், சிறுவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானதை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.