திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பை கொட்டப்பட்டதை கண்டித்து, திமுக வேட்பாளர் தினேஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சரங்காடு பகுதியை சேர்ந்த கேசவ மூர்த்தி என்பவர் ரூ. 1000 சில்லறை காசுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். முதலிபாளையம், நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் தினேஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை எதிர்த்து திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி, 70-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். அவர்களில் 5 பேர் மட்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மீதி ரூ. 9 ஆயிரத்தை ரூபாய் நோட்டுகளில் செலுத்தினர்.