திருப்பூர்: மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது

79பார்த்தது
திருப்பூர்: மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிப்பு, நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்தது, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்றவற்றை கண்டித்து மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. 

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் ந. தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ. தங்கராஜ் வரவேற்றார். பகுதி செயலாளர்கள் ஜோதி, கொ. ராமதாஸ், மின்னல் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. தலைமை பேச்சாளர்கள் சாவல்பூண்டி சுந்தரேசன், குடியாத்தம் அன்பு ஆகியோர் பேசினார்கள். 

சாவல்பூண்டி சுந்தரேசன் பேசுகையில், மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. இந்தி மொழியை திணித்தால் பா.ஜனதா ஆட்சி அழிந்துபோகும். எந்த காலத்திலும் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடுவோம் என்றார்.

தொடர்புடைய செய்தி