விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

1பார்த்தது
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் தின விழிப்புணர்வு வார நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் அரசுத்துறை சார்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்போம், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம், குழந்தைத் தொழிலாளர்களை கலைவோம் போன்ற வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி, கோஷங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தென்னம்பாளையம் வரை பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி