2026 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய தேர்வுகள் முகமை (என். டி. ஏ) அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க htttps: //nta. ac. in என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம். தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 7ம் தேதி வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 8 ஆகும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 1,700 ரூபாய்.