திருப்பூர்: பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்குதீர்வு காண வேண்டும்

65பார்த்தது
திருப்பூர்: பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்குதீர்வு காண வேண்டும்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்ததொழிலாளர் சங்க மாநில இணைப் பொதுச் செயலாளரும் சமூக ஆர்வலருமான ஈ.பி.ஏ. சரவணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - பொதுமக்கள் தரும் மனுக்களை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். 

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாதகாலத்திற்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை வேண்டும். திருப்பூர் மாவட்டப் பகுதிகளிலுள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அளித்திருந்த மனுக்களுக்கு பல நாட்களாக முறையாக தீர்வுகாணாமல் கடந்த மூன்று நாட்களில் நிராகரிப்பு தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி