முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு காலங்களில், நாள் முழுவதும் உணவின்றி நோன்பிருக்கும் மக்களுக்கு மாலையில் நோன்பு திறப்பதற்காக பள்ளிவாசல்கள் சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணி தொடங்கியது. மாநகரில் உள்ள பெரிய பள்ளிவாசல், கோம் பைத்தோட்டம் பள்ளிவாசல் என பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை முதலே தன்னார்வலர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல்களில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி பச்சரிசி, பாசிப்பருப்பு, இஞ்சி, ஏலக்காய், பூண்டு, கிராம்பு போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.