திருப்பூர் விஸ்வேஸ்வர சாமி, வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா விஸ்வேஸ்வர சாமி கோவிலில் 30-ந்தேதியும், வீரராகவ பெருமாள் கோவிலில் 31-ந்தேதியும் நடந்தன. இந்நிலையில், வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் சாமி 3 முறை வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுந்தரகாண்டம் சொற்பொழிவும் நடைபெற்றது.