திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

79பார்த்தது
திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்
திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படும் 5 ரெயில்களில் நேரம் கடந்த 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜ்கோட்டில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 16613) இரவு 8.25 மணிக்கு வந்தது. இனி 8.55 மணிக்கு கோவைக்கு செல்லும். 

கோவையில் இருந்து ராஜ்கோட்டுக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 16614) நள்ளிரவு 12.15 மணிக்கு பதிலாக அரை மணி நேரம் தாமதமாக 12.45 மணிக்கு புறப்படும். சில்சார்-கோவை ரெயில் (எண். 12516) மதியம் 12 மணிக்கு பதிலாக 5 நிமிடம் முன்பாக 11.55 மணிக்கு கோவைக்கு வந்து சேரும். 

பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 22665) கோவைக்கு இதுவரை இரவு 9 மணிக்கு வந்தது. இனி 5 நிமிடம் தாமதமாக 9.05 மணிக்கு வந்து சேரும். ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் (எண். 06819) இனி காலை 7.15 மணிக்கு பதிலாக 15 நிமிடம் முன்பாக காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும். இதன்காரணமாக ஊத்துக்குளி, திருப்பூர் உள்ளிட்ட அடுத்த ரெயில் நிலையங்களில் 15 நிமிடம் முன்பாக ரெயில் வரும் என சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.