வெள்ளகோவில் அருகே சேரன்நகரில் உள்ள தனியார் டய
ர் கடையில்
வேலை செய்து வந்த குமார் (25), இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணுடனான காதல் உறவில் ஏற்பட்ட விரிசலால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குமார் உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.