சேவூா் அருகே தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (34), திருப்பூா் ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.