திருப்பூர்: பொது இடங்களில் குப்பை; நிறுவனங்களுக்கு அபராதம்

2பார்த்தது
திருப்பூர்: பொது இடங்களில் குப்பை; நிறுவனங்களுக்கு அபராதம்
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கும், அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு வந்த புகார்களின் அடிப்படையில், சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குமார்நகர் சிக்னல் பகுதியில் குப்பைகள் கொட்டிய தனியார் பனியன் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காவிளிபாளையத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்த நிறுவனத்திற்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you