திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 2026-27 ஆம் ஆண்டிற்கான பயிர்க்கடன் வழங்கும் அளவு மற்றும் திரும்பச் செலுத்தும் காலத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப குழு கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரண வரே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பயிரிடப்படும் பயிர்களுக்கான கடன் அளவை நிர்ணயிப்பது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.