திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் காலியாக இருந்த நிலையில், கோவை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த புனித அந்தோணியம்மாள் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.