திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு (நவம்பர் 11) உடுமலைக்கு புறப்பட்ட அரசு பஸ், மேம்பால தூணில் உரசி சிக்கிக்கொண்டது. இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்களில் சென்றனர். போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்டனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவம் காரணமாக பஸ் நிலைய பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.