திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் இயங்கும் அனுப்பர்பாளையம் இந்திரா வீதி ரேஷன் கடை விற்பனையாளர் மீது முறைகேடு புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களின் இருப்பு குறித்து சோதனை நடத்தினார்கள்.
இதில் ரூ. 9 ஆயிரத்து 250 மதிப்பிலான பொருட்கள் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் பரத் என்பவரை பணியிடை நீக்கம் செய்து பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் தேவி உத்தரவிட்டுள்ளார்.