கார்த்திகை மாதம் நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், திருப்பூர் வழியாக ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம்-நரசாபூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மசூலிப்பட்டினம்-கொல்லம் மற்றும் நரசாபூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இயக்கப்படும் என திருப்பூர் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.