சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாத விரதத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நவ.19 முதல் ஜன.21 வரை சென்னையில் இருந்து கொல்லத்திற்கும், நவ.20 முதல் ஜன.22 வரை கொல்லத்தில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவ.4) தொடங்குகிறது. இந்த ரயில்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.