மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சப் ஜூனியர் கராத்தே போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த 18 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 9 முதல் 13 வயது மற்றும் 14-16 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், மாணவர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். போட்டி முடிந்து திருப்பூர் திரும்பிய மாணவர்களை பெற்றோர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.