திருப்பூர்: கல்லூரிக்கு செல்ல மறுப்பு.. இளம்பெண் தற்கொலை

2பார்த்தது
திருப்பூர்: கல்லூரிக்கு செல்ல மறுப்பு.. இளம்பெண் தற்கொலை
திருப்பூரைச் சேர்ந்த ஷோபியா (19) என்பவருக்கும் விகாஸ் கண்ணனுக்கும் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் படித்து வந்த ஷோபியா கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என கணவர் கூறியும், ஷோபியா கல்லூரிக்குச் சென்றுள்ளார். சனிக்கிழமை மாலை வீடு திரும்பியதும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு மனமுடைந்த ஷோபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 3 மாதங்களே ஆனதால், இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.