ஆசிரியர்களுக்கு பயிற்சி

1பார்த்தது
ஆசிரியர்களுக்கு பயிற்சி
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்கும் 116 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பதிலாக தேர்வு எழுத நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் தெரிவிக்கும் பதிலை மட்டுமே எழுத வேண்டும் என்றும், தவறான பதில்களை திருத்தி எழுதக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. 5 மதிப்பெண் வினாக்களுக்கு எவ்வளவு எழுத வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி