சனாதனம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி முன்பு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், உதயநிதி
ஸ்டாலின் மற்றும் திமுகவை விமர்சித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.