திருப்பூர்: வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு

56பார்த்தது
திருப்பூர்: வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு
திருப்பூர் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. மார்க்கெட்டிற்கு திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளிகள் திறப்பு மற்றும் விசேஷ நாட்கள் இருந்ததால் வியாபாரம் அதிகரித்து விலையும் கூடுதலாக காணப்பட்டது. 

மேலும் காய்கறிகள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை மீண்டும் குறைந்துள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை விவரம்: -(மொத்த விலை) 15 கிலோ எடைகள் கொண்ட புடலங்காய் கட்டு ரூ. 250, சுரைக்காய் கட்டு ரூ. 200, பீர்க்கன்காய் கட்டு ரூ. 500, 18 கிலோ எடைகள் கொண்ட வெண்டைக்காய் மூட்டை ரூ. 300, மிளகாய் மூட்டை ரூ. 700 முதல் ரூ. 1,000, கத்தரிக்காய் மூட்டை ரூ. 400 முதல் ரூ. 600, அவரைக்காய் மூட்டை ரூ. 300, தட்டை பயிறு ரூ. 600, பாகற்காய் மூட்டை ரூ. 1,000, 20 கிலோ எடை கொண்ட முள்ளங்கி மூட்டை ரூ. 500, 25 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை ரூ. 700, 40 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் மூட்டை ரூ. 300, 15 எண்ணம் கொண்ட காலிபிளவர் மூட்டை ரூ. 600, 10 கிலோ எடை கொண்ட மாங்காய் மூட்டை ரூ. 250 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி