கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

2பார்த்தது
கிணற்றில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
திருப்பூர் அரண்மனைப்புதூர் பகுதியில் உள்ள கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி