திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சிக்கு 2, 3, 4-வது குடிநீர் திட்டங்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் தலைமை நீரேற்று நிலையத்தில் 4-வது குடிநீர் திட்டத்தில் நீரேற்று பணிகளை மேற்கொள்ள இயலாது. இதன் காரணமாக மாநகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.