விஜயின் ஆட்சியை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

345பார்த்தது
திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள குமரன் நினைவகத்தில், சான்றோர் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் சதா நாடார், திருப்பூர் குமரனின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சான்றோர் மக்கள் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றதாகவும், அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் லட்சிய ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயல்பட ஒருமனதாக விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், விஜயின் ஆட்சியை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் பேட்டியளித்தார்.