திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் புகையிலை விற்ற போயம்பாளையம், அவினாசி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 31) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 60 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.