திருப்பூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி; பெண் கைது

81பார்த்தது
திருப்பூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி; பெண் கைது
திருப்பூர் திருமலைநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சரளா (வயது 40). ரேஷன் கடையில் தற்காலிகமாக வேலை செய்து வந்தார். ஏலச்சீட்டு மற்றும் பண்டு சீட்டுக்கும் பணம் வசூல் செய்தார். இவரிடம் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் சீட்டில் சேர்ந்து தவணைத்தொகையை செலுத்தி வந்தனர். 

அந்த சீட்டுக்கான தொகையை வசூல் செய்து சீட்டு அட்டையில் சரளா கையெழுத்திட்டு கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஏலச்சீட்டு மற்றும் வாராந்திர சீட்டு பணம் ரூ. 30 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்துவிட்டு முதிர்வு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். 

இதுதொடர்பாக திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் கந்தர்மணி தலைமையிலான தனிப்படையினர் சரளாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி