திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடரத்தினம், கோவில் அர்ச்சகர். இவருடைய மனைவி சுபஸ்ரீ (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சுபஸ்ரீ மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபஸ்ரீ திடீரென்று தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.